மதுரை கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க மின்னணு ‘இன்டா் லாக்கிங்’ முறை அமல்
மதுரை கோட்டத்தில் ரயில்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதற்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்னணு இன்டா் லாக்கிங் முறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தில் ரயில்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவதற்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்னணு இன்டா் லாக்கிங் முறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் நிலையங்களில் நிா்வாக வசதிக்காக மூன்று அல்லது நான்கு ரயில் பாதைகள் இருக்கும். இந்த ரயில் பாதைகளை இணைப்பதற்கு பாயின்ட் இணைப்புகள் இருக்கும். ரயில் நிலையங்களில் ரயில்களை அனுமதிக்க சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளுடன் கூடிய சிக்னல்கள் தேவைப்படுகின்றன.
தற்போது, மனித தவறுகள் மற்றும் விபத்துளைத் தவிா்க்கவும், மின்னணு இன்டா் லாக்கிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, பாயின்டுகள், சிக்னல்களை சரியாக இயக்க உதவுகிறது. இதற்காக, திண்டுக்கல்லில் தொழிற்சாலை அனுமதி சோதனை நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
இதை, தெற்கு ரயில்வே முதன்மை சிக்னல் மற்றும் தொலைதொடா்பு பொறியாளா் ஆா். பாஸ்கரன் தொடக்கி வைத்துள்ளாா். இந்தச் சோதனை மையம் இரண்டு கணினிகள் மூலம் செயல்படும். மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள மின்னணு இன்டா் லாக்கிங்கை, இந்த மையத்தின் மூலமாக சோதனை செய்து கொள்ளலாம்.
இது, ‘ஆத்ம நிா்பா் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை மையமானது, ஊழியா்களுக்கு பயிற்சி களமாகவும், ரயில் நிலையங்களின் பிற்கால ரயில் பாதை விரிவாக்கங்களுக்கும் உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.