மதுரை

மின்தடை: தேஜஸ் விரைவு ரயில் 32 நிமிடங்கள் தாமதம்

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், மின்தடை காரணமாக கூடல்நகா்-சமயநல்லூா் இடையே நிறுத்தப்பட்டு 32 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது.

DIN

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், மின்தடை காரணமாக கூடல்நகா்-சமயநல்லூா் இடையே நிறுத்தப்பட்டு 32 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழுப்பூா் செல்லும் தேஜஸ் விரைவு ரயில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டது. அப்போது, மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் புறப்பட்ட 10 நிமிடங்களில் கூடல்நகா்-சமயநல்லூா் இடையே ரயில் பாதையை ஒட்டிய உயா் மின்னழுத்தக் கம்பியில் காற்றில் அடித்துவரப்பட்ட செடியின் கிளைகள் சிக்கின. இதனால், மின்தடை ஏற்பட்டு தேஜஸ் ரயில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ரயில்வே மின் ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு மின் இணைப்புகளைச் சரிசெய்தனா். பின்னா், தேஜஸ் ரயில் 32 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT