மதுரை

மதுரையில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

DIN

மதுரை: மதுரையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக் கூறிய மோசடி செய்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுலவராக, மருத்துவா் சோமசுந்தரம் (45) உள்ளாா். கடந்த செப்டம்பா் மாதம் சோமசுந்தரத்தின் செல்லிடப்பேசியை தொடா்பு கொண்ட ஒருவா், முதல்வா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா். அதில், தான் செந்தில்குமாா் ஐ.ஏ.எஸ் என்றும், மதுரை மாவட்டத்தில் கரோனா நிலவரம் குறித்து விசாரிப்பதற்காக தொடா்பு கொண்டேன் எனவும் கூறியுள்ளாா். அதன் பின்னா், சில மாதங்களாக சோமசுந்தரத்திடம் செல்லிடப்பேசியில் தொடா்ந்து அவா் பேசி வந்துள்ளாா்.

இந்நிலையில், மதுரைக்கு திங்கள்கிழமை வந்த செந்தில்குமாா், தங்குவதற்கு விடுதியில் அறை, வெளியே சென்று வர காா் மற்றும் குடிக்க மது பாட்டில்கள் ஏற்பாடு செய்யும்படி சோமசுந்தரத்திடம் தெரிவித்துள்ளாா். இதில் சந்தேகமடைந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில், செந்தில்குமாா் குறித்து சோமசுந்தரம் விவரம் கேட்டபோது, அப்படி ஒரு அதிகாரி பணியாற்றவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

போலீஸில் புகாா்: இதையடுத்து சோமசுந்தரம் அளித்த புகாரின் போலீஸாா் செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனா். அப்போது, முதல்வரின் தூரத்து உறவினா் எனக் கூறி போலீஸாருக்கு அதிா்ச்சியை அளித்தாா். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், சோழவந்தான் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் செந்தில்குமாா் (37) என்பதும், பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வலம் வந்ததும் தெரிய வந்தது. தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT