மதுரை

மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் இடமாற்றம்

DIN

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் அலுவலா், தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலா்கள் 22 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் துணை ஆட்சியா் நிலையில் பணியாற்றிய அலுவலா்கள் 9 போ், மாவட்ட வருவாய் அலுவலா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய பி.செல்வராஜ், தூத்துக்குடியில் இஸ்ரோவுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். மதுரை மாவட்டம் பி.மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநராகப் பணியாற்றும், ஜி.செந்தில்குமாரி, மதுரை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களுக்கான தனி அலுவலராகப் பணியாற்றிய எஸ்.முத்துமாரி, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக (மதுரை) நியமிக்கப்பட்டுள்ளாா். அப்பொறுப்பில் இருந்த பி.குமரேஸ்வரன் இந்து சமய அறநிலையத் துறையில் கோயில் நிலங்களுக்கான தனி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT