மதுரை

கருவூலங்களில் புதிய மென்பொருள் முறையை அமல்படுத்த தடைகோரி வழக்கு: நிதித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

DIN

கருவூலங்களில் புதிய மென்பொருள் முறையை அமல்படுத்த தடைகோரிய வழக்கில், தமிழக நிதித்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள கருவூலங்களில் கணக்குகளைப் பராமரிக்க ஏடிபிபிஎஸ் என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக நிதித்துறை, தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதிய மென்பொருள் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கருவூலங்களில் வழங்கப்படும் ஊதியங்கள் அனைத்தும் தனியாா் நிறுவனம் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் முதல்கட்டமாக இந்த மென்பொருள் ஈரோடு, கரூா் ஆகியப் பகுதிகளில் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இதில் ஓய்வூதியம் சரியானக் கணக்கிற்கு சென்று சேராதது என்பன உள்ளிட்டப் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள கருவூலங்களில் புதிய மென்பொருள் முறையை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக நிதித்துறைச் செயலா், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT