மதுரை

தேசிய புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

DIN

மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் தேசிய புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் நடத்தப்படும் 35-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மதுரை மேலக்கோபுர வீதியில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் தொடங்கும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் நூல்கள், புதிய வெளியீடுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

கண்காட்சியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் மண்டல மேலாளா் அ.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் கு.சாமித்துரை, பேராசிரியா் ச.வின்சென்ட், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பேராசிரியா் பா.ஆனந்தகுமாா், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவா் மு.செல்லா உள்பட பலா் பங்கேற்கின்றனா். கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்று நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT