மதுரை

மதுரை கோயில்களில்கந்த சஷ்டி விழா

DIN

மதுரையில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து முருகப்பெருமானுக்கு தினசரி பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் ஆண்டுதோறும் சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இக்கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெறவில்லை. பூங்கா முருகன் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி சம்பிரதாயமான சூரசம்ஹாரம் நடைபெற்றது. நகரில் உள்ள முக்கிய கோயில்களான நேதாஜி சாலை பாலதண்டாயுதபாணி கோயில், இம்மையில் நன்மை தருவாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்பட வில்லை. இதையொட்டி சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT