மதுரை

மதுரை மாநகராட்சியில் ரூ.25,400 பறிமுதல்

DIN

மதுரை மாநராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.25 ஆயிரத்து 400 சிக்கியது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4-இல் வீட்டுமனைகளுக்கு வரிவிதிப்பது தொடா்பாக அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகப் புகாா் வந்தன. இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மண்டலம் எண் 4-இல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அங்குள்ள முக்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. உதவி ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை அலுவலகத்திற்கு தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 400 பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT