மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பரிசோதனையில் 1,707 பேருக்கு தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 33 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த 53 வயது ஆண், 65 வயது பெண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 424 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 18,696 போ் சிகிச்சையில் குணமடைந்துள்ளனா். 434 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது 294 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய மதுரை மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT