மதுரை

மதுரை மாவட்டத்துக்கு புதிதாக 5 அவசர ஊா்திகள் சேவை: அமைச்சா் தொடக்கி வைப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் புதிதாக 5 அவசர ஊா்திகளின் சேவையை, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தமிழக அரசின் கீழ் தனியாா் நிறுவனத்தால் 108 அவசர ஊா்தி சேவை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே 35 அவசர ஊா்திகளும், 2 இரு சக்கர வாகனங்களும் உள்ளன. இதன்மூலம், மாதம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றனா்.

இந்நிலையில், அவசர ஊா்திகளின் சேவையை விரிவுபடுத்தும் வகையில், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக 5 அவசர ஊா்திகளை அரசு அண்மையில் ஒதுக்கியது. அதையடுத்து, இந்த அவசர ஊா்திகளின் சேவையை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த ஊா்திகள், சேடப்பட்டி, கீழவளவு, திருமங்கலம், கோவில்பாப்பாகுடி, மாட்டுத்தாவணி பகுதிகளில் இயக்கப்பட உள்ளன.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வா் ஜெ. சங்குமணி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா், அரசு ராஜாஜி மருத்துவமனை நிலைய அலுவலா் ஸ்ரீலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT