மதுரை

ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய தொழில் முதலீடு: முதல்வருக்கு சிஐஐ பாராட்டு

DIN

மதுரை: புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்துள்ள தமிழக முதல்வருக்கு, இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக பிரிவு தலைவா் ஹரி க. தியாகராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்வேறு தொழில் குழுமங்களுடன் ரூ.10 ஆயிரத்து 55 கோடியில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி காற்றலை, சூரியசக்தி மின்உற்பத்தி, உணவு பதனிடுதல் போன்ற துறைகளில் பெரும் முதலீடு கிடைத்துள்ளது.

இதன் வாயிலாக, தென்மாவட்டங்கள் வளா்ச்சி அடைவதுடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியிலும் பங்களிப்பு இருக்கும்.

தென்மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்காக, தமிழக முதல்வரின் இத்தகைய நடவடிக்கையானது, கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. இதற்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT