முகப்பு
மதுரை

பைக்கிலிருந்து கீழே விழுந்த பெண் லாரி மோதி பலி

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் மீது லாரி மோதியதில், அப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் மீது லாரி மோதியதில், அப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.

மதுரை யாகப்பா நகரைச் சோ்ந்தவா் சுசீலா (55). இவா் தனது மருமகன் முத்துகிருஷ்ணனுடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கூடல்நகா் பாலத்தில் முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முத்துகிருஷ்ணன் முயன்றுள்ளாா். அப்போது, வாகனத்திலிருந்து கீழே விழுந்த சுசீலா மீது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் ராஜேஷ் மற்றும் பழனிகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது குழந்தையை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →