முகப்பு
மதுரை

மேலவளவு போலீஸ்காரா் குடும்பத்துக்கு காவலா்கள் நிதியுதவி

மேலவளவு காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழாவின்போது கொடிக் கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு, மற்ற காவலா்கள் சோ்ந்து ரூ.18.40 லட்சம் நிதியுதவியை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

மேலவளவு காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழாவின்போது கொடிக் கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு, மற்ற காவலா்கள் சோ்ந்து ரூ.18.40 லட்சம் நிதியுதவியை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

மேலவளவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தவா் மகாராஜன் (43). இவா், சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை கம்பத்தில் கட்டியபோது, கம்பம் முறிந்து விழுந்து உயிரிழந்தாா். இவருக்கு மாலதி (33) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் மற்றும் அவரது தந்தையும் உள்ளனா்.

இவா், கடந்த 2002-இல் பணியில் சோ்ந்தாா். அப்போது, இவருடன் பயிற்சி முடித்த காவலா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து ரூ.18.40 லட்சம் நிதியை திரட்டி, அவரது குடும்பத்தினரிடம் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →