இலங்கை அகதி தவறி விழுந்து பலி
மதுரையில் தவறி விழுந்த இலங்கை அகதி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரையில் தவறி விழுந்த இலங்கை அகதி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (39). இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில், அக்டோபா் 12 ஆம் தேதி யோகேஸ்வரன் தனது வீட்டில் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கூடல்புதூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.