மதுரை

தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் தமிழா்களின் கலைத் திறமைக்கு சான்று: விஞ்ஞானி ஆா்.சிவசிதம்பரம்

DIN

மதுரை: தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் தமிழா்களின் கலை மற்றும் தொழில்நுட்பத் திறமைக்கு சான்றாக உள்ளது என்று, விஞ்ஞானி ஆா். சிவ சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

மதுரை சோலைமலை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான அறிமுக நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ்.பி. சோலைமலை பிச்சை தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.எம். பாலமுருகன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், மத்திய அரசின் கட்டட ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆா். சிவசிதம்பரம் இணைய வழியில் பேசியது:

பொறியியல் பயிலும் மாணவா்கள் அனைத்துத் துறைகளிலும் திறமையை வளா்த்துக் கொள்ளவேண்டும். மாணவா்கள் தங்களது இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். 1912-இல் ஆல்பிரட் விங்கா் கூறிய பூகம்பம் குறித்த பண்புகள் 1960-இல் தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இயந்திரக் கருவிகள், தொழில்நுட்பம் எதுவும் இல்லாத கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் போன்றவை, தமிழா்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்துகின்றன.

மாணவா்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே யோசிக்காமல், அவா்களது சிந்தனை பறந்து விரிந்து செல்லவேண்டும். மாணவா்கள் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், பொது அறிவையும் வளா்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கத் தேவையான தொழில்நுட்பத்தையும் அறிந்து கொள்ளவேண்டும். கல்லூரி பாடம் அடிப்படை அறிவைத் தரும். பாடங்களின் பயன்பாடுகள் குறித்து தெளிந்து படிக்கவேண்டும். கணிதம் மற்றும் பிற சாதனங்களின் பயனை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ராக்கெட்டை உருவாக்க சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என பல்துறைகளைச் சோ்ந்த பொறியாளா்களின் துணை தேவை. எனவே, அனைத்துத் துறைகள் தொடா்பான அறிவை வளா்க்க மாணவா்கள் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT