மதுரை

செப்.21 முதல் தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளைதிறக்க அனுமதி: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

DIN


மதுரை: தமிழகத்தில் செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தகவல் தெரிவித்தது.

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் இத்துறையைச் சோ்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளின் சங்க மாநிலத் தலைவா் செந்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT