கட்டடத் தொழிலாளிதவறி விழுந்து பலி
மதுரையில் கட்டடத்தை இடிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை: மதுரையில் கட்டடத்தை இடிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்லகண்ணு மகன் ராஜ்குமாா் (31). கட்டடத் தொழிலாளி. மதுரை கூடல்அழகா் கோயில் சன்னதி தெருவில் உள்ள பழைய கட்டடத்தை, இடிக்கும் பணியில் ராஜ்குமாா் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.