முகப்பு
மதுரை

மதுரை கோட்டத்தில் ரயில் முன்பதிவு கட்டணம் ரூ.7.67 கோடி திரும்ப வழங்கல்

மதுரை கோட்டத்தில் பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.7.67 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

மதுரை: மதுரை கோட்டத்தில் பொதுமுடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.7.67 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 24 ஆம் தேதி பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுக் கட்டணத்தைப் பயணத் தேதியிலிருந்து 180 நாள்கள் வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. பொதுமுடக்கத்தின் போது முதல் கட்டமாக ஜூன் மாதம் மதுரை, திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து பழனி, ராஜபாளையம், திருச்செந்தூா் ரயில் நிலையங்களிலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டணத்தை திரும்ப வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, கடந்த 3 மாதங்களில் ரூ.7 கோடியே 67 லட்சத்து 58 ஆயிரத்து 800 ரயில் பயணிகளிடம் முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது என மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →