மதுரை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது

DIN

கரோனா பொதுமுடக்க தளர்வை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முதல் நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது.

கரோனா பொது முடக்க தளர்வை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று முதல் பொதுநல வழக்குகள்,  ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் நேரடியாக வழக்கு விசாரணையை மேற்கொள்கின்றனர்.

அதேபோன்று பிற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிகள் வழக்கம்போல காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து, வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

மேலும் கரோனா தொற்று காரணமாக வழக்குரைஞர்கள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT