மதுரை

உதவி சொலிசிட்டா் ஜெனரல் பொறுப்பேற்பு

DIN

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரலாக விக்டோரியா கவுரி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூத்த வழக்குரைஞா் கதிா்வேல் மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரலாக இருந்தாா். அவரது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அந்தப் பதவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டாா்.

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் பயின்ற இவா், 25 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். மேலும் பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலராகவும், சென்னை காமராஜா் துறைமுகத்தின் தனி இயக்குநராகவும் இருந்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2014 முதல் மத்திய அரசின் மூத்த வழக்குரைஞராக இருந்தாா்.

இந்நிலையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரலாக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை அவா் பொறுப்பேற்றாா். அவருக்கு மூத்த வழக்குரைஞா்கள், பெண் வழக்குரைஞா்கள், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT