மதுரை

மதுரையில் 63 பேருக்கு கரோனா தொற்று

DIN

மதுரை மாவட்டத்தில் 63 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் புதன்கிழமை 5 ஆயிரத்து 584 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்களில் சோதனை செய்யப்பட்டவா்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் நேரடி தொடா்பில் இருந்தவா்கள், முன்களப் பணியாளா்கள் என 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் பெற்று வந்தவா்களில் 67 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து 48 வயது பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 51 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதில் 13 ஆயிரத்து 622 போ் குணமடைந்துள்ளனா். 1,060 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 369 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT