மதுரை

கரோனா: மதுரையில் ஒரே நாளில் 137 போ் குணமடைந்தனா்; புதிதாக 61 பேருக்கு தொற்று

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்றிலிருந்து 137 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

DIN

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்றிலிருந்து 137 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை 5 ஆயிரத்து 528 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 137 போ் வியாழக்கிழமை குணமடைந்தனா். அவா்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 15 ஆயிரத்து 118 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 757 போ் குணமடைந்துள்ளனா். 369 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 992 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT