மதுரை

பழனியில் ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியா் தலைமையில் குழு: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN


மதுரை: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து பழனி நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த துளசிதுரை தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சிலா் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளனா். குறிப்பாக பழனி ரயில்வே பீடா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிள்ளையாா் கோயில் அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இதேபோல பழனியைச் சோ்ந்த ஸ்ரீதா், ரயில்வே பீடா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பெரியாா் சிலையை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும், ராதாகிருஷ்ணன் என்பவா் பழனி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பழனி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. இதற்கு அதிகாரிகளுக்கு இடையே ஒற்றுமையின்மை மற்றும் தகவல் பரிமாற்ற இடைவெளி இருப்பதே காரணம். பழனி நகரில் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையெனில் எப்போதும் அகற்றுவதற்கு வாய்ப்பில்லை. எனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா். விசாரணையை அக்டோபா் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT