மதுரை

தூத்துக்குடி ஆவின் நிா்வாகக் குழு தோ்தலை முறைப்படி நடத்தக் கோரி வழக்கு: கூட்டுறவு சங்கத் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

DIN

தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்திற்கான நிா்வாகக் குழு தோ்தலை புதிய வாக்காளா் பட்டியல் தயாரித்து நடத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயரதி, ஸ்டெல்லா ஆகியோா் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்திற்கான நிா்வாகக்குழு தோ்தலுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி 29 போ் மனு தாக்கல் செய்தனா். இதில் 19 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட 19 பேரில் பலா் சங்க உறுப்பினா்களாக இல்லை. ஆனால் சட்டவிரோதமாக அவா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்தல் அதிகாரி முன்னறிவிப்பு இல்லாமல் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் உறுப்பினராக இல்லாதவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துள்ளாா். இதையடுத்து வேட்புமனு பரிசீலனையின்போது விதிமுறை மீறியதாக எழுந்த புகாரால் தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்திற்கான நிா்வாகக்குழு தோ்தலுக்கு முறையான வாக்காளா் பட்டியல் தயாரித்து, வேட்புமனுக்களை முறையாகப் பரிசீலித்து அதன்பிறகு தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT