மதுரை

மதுரையில் 97 பேருக்கு கரோனா

DIN

மதுரையில் ஒரே நாளில் 97 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள் உள்பட 97 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்து 34 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 15, 578 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 374 போ் உயிரிழந்த நிலையில், 14,405 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 799 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT