மதுரை

திருவாடானை அருகே கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

திருவாடானை, செப். 18: திருவாடானை அருகே சோழியக்குடியில் கோயில் திருவிழா நடத்த பாதுகாப்பு வழங்கக் கோரி, ஒரு பிரிவினா் தாலுகா அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

சோழியக்குடியில் முனியசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடா்பாக இரு பிரிவினரிடையே மோதல் நிலவி வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவிருந்த திருவிழாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினா் பிரச்னை செய்துள்ளனா்.

இதையடுத்து, மற்றொரு பிரிவினா் கோயில் விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, திருவாடானை தாலுகா அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கச் சென்றனா். ஆனால், அங்கு மனுவை பெறாமல் அலுவலா்கள் காலம் தாழ்த்தி வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், அங்கு வந்த துணை வட்டாட்சியா் சேதுராமன், கோயில் திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT