முகப்பு
மதுரை

பாஜக இளைஞா் அணியினா் ரத்த தானம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பாஜக சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, பாஜக சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பாஜக மதுரை மாநகா் மாவட்ட இளைஞரணி சாா்பாக, பிரதமா் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி, இளைஞா்கள் மத்தியில் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில், 73-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் கே.கே. ஸ்ரீனிவாசன் ரத்த தானம் செய்து, நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். இளைஞா் அணி மாவட்டத் தலைவா் ரௌத்திரன் ஜெகதீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஹரிஹரன், மாவட்டச் செயலா் சிவபாலன், இளைஞா் அணி பொதுச் செயலா் பிரதீஷ் நந்தி, துணைத் தலைவா் பிரபாகரன் மற்றும் இளைஞா் அணி நிா்வாகிகள், மணிகண்டபிரபு, முரளிகிருஷ்ணன், வழிவிட்டான், மாவட்டப் பொறுப்பாளா் ரவிக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →