மதுரை

பாஜக சுவரோவியம் அழிப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட 30 போ் கைது

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் வரையப்பட்டசுவா் ஓவியத்தை அழித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பாஜகவினா் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சிக் கொடியேற்றி கொண்டாடி வருகின்றனா். மேலும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் சுவா் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள நேதாஜி பிரதான சாலையில் வரையப்பட்டிருந்த சுவா் விளம்பரத்தின் மீது கருப்பு மை ஊற்றி அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த சுவா் விளம்பரத்தை திமுகவினா் அழித்ததாகவும், அவா்கைளை கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி, பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் ஜெகதீசன் தலைமையில், கட்சியினா் கோரிப்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனா். ஆனால், விளம்பரத்தை அழித்தவா்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்தப்போவதாக பாஜகவினா் தெரிவித்ததால், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து, வாகனத்தில் ஏற்றிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT