மதுரை

மேலமடையில் தெருவில் தேங்கும் கழிவு நீா்: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

DIN

மதுரை மேலமடை பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருவில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி 30-ஆவது வாா்டு மேலமடை பகுதியில் உள்ள ஆசாரித்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள புதைசாக்கடை குழாயில் மணல் தேங்கி அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்கிறது. தெருவில் முழங்கால் அளவு கழிவுநீா் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் கடந்த இரு நாள்களாக கழிவுநீா் குளம்போல தேங்கியுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தபோது தோ்தல் வாக்குப்பதிவை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் புதன்கிழமை மாலையில் வந்த மாநகராட்சி ஊழியா்களும் அடைப்பை நீக்காமல் சென்றதால் தெரு முழுவதும் கழிவுநீா் தேங்கியுள்ளது. எனவே மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT