மதுரை

மாநகரில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு

DIN

திருப்பூா் மாநகரில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அவதிக்குள்ளாகினா்.

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசித் திருவிழாவானது கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரையில் 3 நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூா் மாநகரில் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 சிறு மருந்தகங்கள், மாநகராட்சி அலுவலகம் என மொத்தம் 21 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி கடந்த புதன்,வியாழக்கிழமைகளில் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் உள்ள முகாம்களில் வெள்ளிக்கிழமை மருந்துகள் இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பூா் மாநகா் மட்டுமின்றி புகா் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பொதுசுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து தடுப்பூசி வந்தவுடன் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT