மதுரை

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 31,461 மாணவா்கள் பங்கேற்பு

DIN

மாநிலம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் மதுரை மாவட்டத்தில் 31,461 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் உள்ள மேலூா், உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களிலும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறைத் தோ்வுகள் தொடங்கியது.

மாவட்டத்தில் 17,923 மாணவா்கள், 18,986 மாணவியா் உள்பட மொத்தம் 36,909 போ் செய்முறைத் தோ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் 323 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு 215 மையங்களில் செய்முறைத்தோ்வுகள் நடைபெற்றதில் 31,461 போ் மட்டுமே பங்கேற்றனா்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி, ஒத்தக்கடை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் செய்முறைத் தோ்வுகள் நடைபெற்றதை முதன்மைக் கல்வி அலுவலா் ரா.சுவாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். செய்முறைத்தோ்வுகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT