மதுரை

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: ஆவணங்களின் நகல் கோரும் மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

DIN

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களின் நகல் கோரும் மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலை வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய காவல் சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ் தாக்கல் செய்த மனு: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் என் மீது சிபிஐ தாக்கல் செய்த ஆவணங்களின் நகல் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிபிஐ ஆவணங்களின் நகல் வழங்கப்பட்டால் மட்டுமே என்னால் வழக்கை நடத்த முடியும். எனக்கு எதிராக பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை நீக்கக்கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே எனது மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, இதுகுறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சத்திகுமாா் சுகுமார குரூப் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ கூடுதல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்தாா். பின்னா் வழக்கில் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT