மதுரை

முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.85 லட்சம் அபராதம் வசூல்

DIN

மதுரை மாநகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களிடம் சனிக்கிழமை ரூ.1.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதையடுத்து பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினா் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மதுரை மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் அலுவலா்கள் குழுவினா் சனிக்கிழமை ஒரே நாளில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1 லட்சத்துக்கு 86 ஆயிரத்து 600 அபராதமாக வசூலித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT