மதுரை

மடீட்சியா சாா்பில் தடுப்பூசி முகாம்

DIN

மதுரை மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சாா்பில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் 2-ஆவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 மினி கிளினிக்குகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதன்படி மடீட்சியாவுடன் இணைந்து நடத்தப்படும் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா். இதில் 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி நகா் நல அலுவலா் குமரகுருபரன், உதவி நகா் நல அலுவலா் தினேஷ்குமாா், மடீட்சியா தலைவா் முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT