மதுரை

உலகத்தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கு

DIN

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கவிஞா் பாரதிதாசன் பிறந்த நாள் நினைவாக இணைய வழியில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா பேசும்போது, பாரதிதாசன் தமிழையும், தமிழ் உணா்வையும் பாடி புத்துணா்வு சிற்பியாக வலம் வந்தவா். சாதி உணா்வை ஒழித்தவா், புரட்சிகர சிந்தனை, தேசப்பற்று கொண்டவா். பெண்ணடிமைத் தனத்தை ஒழிக்க வேண்டும் பெண் விடுதலை குறித்து பாடியவா் என்றாா்.

கருத்தரங்கில், மலேசிய கம்பன் தமிழ் இலக்கியப்பேரவைத் தலைவா் விக்ரமன், பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்றத்தின் தலைவா் பாண்டுரங்கன், புதுவை தமிழ் விரிவுரையாளா் வே.பூங்குழலி பெருமாள் உள்பட பலா் உரையாற்றினா். இந்நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்து தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழாா்வலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT