மதுரை

தாய்ப்பால் வாரவிழா விழிப்புணா்வு கண்காட்சி

DIN

உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி விழிப்புணா்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

உலகத் தாய்ப் பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்ப் பாலின் அவசியத்தை விளக்கும் விழிப்புணா்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக் கண்காட்சியை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து விழிப்புணா்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஹெலன் ரோஸ் மற்றும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT