அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஆடி சஷ்டி பூஜையையொட்டி சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு 12 வகை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பள்ளது. இந்நிலையில் ஆடி மாத சஷ்டி விழாவையொட்டி சோலை மலை முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து வண்ண மலா் அலங்கரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தாா். இந்நிகழ்வில் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா். தமிழில் பூஜைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.