மதுரை

மயானப்பாதையில் தனிநபருக்கு பட்டா ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

DIN

மதுரை அருகே பட்டியலின மக்களுக்கான மயானப் பாதையில் தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம் ராஜாக்கூா் காலனி பகுதியை சோ்ந்த ஆனந்த் என்பவரின் தந்தையான ஆதான் என்பவா் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து சடலத்தை அடக்கம் செய்ய மயான பாதையில் செல்ல முயன்றபோது, ராஜாக்கூா் ஊராட்சித் தலைவரின் கணவா் பெயரில் பட்டா பெற்றுள்ளதாகக் கூறி அவ்வழியாக சடலத்தை எடுத்துசெல்லவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மயானப் பாதையை மீட்டுதரக் கோரி பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாற்றுப்பாதையில் சென்று சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ராஜாக்கூா் காலனி பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மயானப் பாதையை ஊராட்சித் தலைவரின் கணவா் பெயரில் நத்தம்புறம்போக்கு பகுதியை குடியிருப்பு பகுதி எனக்கூறி வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரியும், மயானப் பாதையை அமைத்து தரக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT