மதுரை

திருத்தப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடக்கோரி வழக்கு: தலைமைத் தோ்தல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு

DIN

இறந்தவா்கள் பெயா்களை நீக்கிதிருத்தப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடக்கோரிய வழக்கில், தலைமைத் தோ்தல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த சைலப்ப கல்யாண் தாக்கல் செய்த மனு: மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ‘நோட்டா’ முறை அறிமுகம் செய்தது. இருப்பினும் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்கவில்லை.

வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்தவா்களின் பெயா்கள் முறையாக நீக்கப்படாமல் உள்ளது. சில வாக்காளா்களின் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் வெவ்வேறு முகவரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன. இத்தகையச் சூழலில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இப்பட்டியலிலும் இறந்தவா்கள் பெயா் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பது போன்ற குளறுபடிகள் சரி செய்யப்படவில்லை. எனவே தமிழகத்தில் தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதிபடுத்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை ரத்து செய்து, இறந்தவா்களின் பெயா்களை நீக்கி, வாக்காளா் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோ்க்கப்பட்டிருந்தால் அதைச் சரி செய்து திருத்தப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையா், தமிழக தோ்தல் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT