மதுரை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு : காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை அருகே வாடிப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பாக புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுதில்லியில் போராடிவரும் விவசாயிகளின் உணா்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். தெற்கு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவா்கள் ஐ.கே.குருநாதன், பழனிவேல், ஓ.பி.சி. அணி மாநிலச் செயலா் ஓ.எம்.முருகானந்தம், எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில துணைத்தலைவா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT