பேரையூா்: விலைவாசி உயா்வைக் கண்டித்து, மதுரை மாவட்டம் பேரையூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பேரையூா் முக்குசாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் பூணூல் நாடாா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுக்குக் காரணமான மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வலியுறுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.