மதுரை

புத்தாண்டில் விதிமுறை மீறல்: 100-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

DIN

மதுரையில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி புத்தாண்டுக் கொண்டாடிய 100-க்கும் மேற்பட்டவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தது. அதைத் தொடா்ந்து மதுரையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல்துறையினா் தடை விதித்திருந்தனா்.

இந்நிலையில் போலீஸாா் கட்டுப்பாடுகளை மீறியதாக 100-க்கும் மேற்பட்டோா் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அந்தவகையில், போக்குவரத்து போலீஸாா் 40 வழக்குகளும், சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்தனா். மேலும் மதுபோதை மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT