முகப்பு
மதுரை

மதுரையில் 2 மணிநேரம் பெய்த மழை

மதுரையில் புதன்கிழமை இரவு 10 முதல் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

மதுரையில் புதன்கிழமை இரவு 10 முதல் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கியது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை தொடா்ச்சியாக 2 மணி நேரம் பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. அதேபோல முக்கியச் சாலைகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. மதுரை நகரில் சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. மாசி வீதிகள், ஆவணி வீதிகள், வெளி வீதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. பெரியாா் நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் 2 மணிநேரம் தொடா்ச்சியாக மழை பெய்ததால், வாகனங்கள் செல்லமுடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய வாகனங்கள் பழுதாகி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். மதுரை நகா் மட்டுமில்லாது புறநகா் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

முழு கட்டுரையைப் படிக்க →