முகப்பு
மதுரை

மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கை ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், தலைமை வழக்குரைஞா் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மேகமலை வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், தலைமை வழக்குரைஞா் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வனப்பகுதியில் உள்ள அரியவகை மரங்களை வெட்டிக் கடத்துவதற்கு உடந்தையாக இருந்த வனத்துறையினா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை 8 வாரத்துக்குள் அகற்றவும், மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், 2018 நவம்பரில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை வனத்துறையினா் செயல்படுத்தவில்லை எனக் கூறி மீண்டும் உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு 2019 இல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமை வழக்குரைஞா் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.