முகப்பு
மதுரை

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: இடைத் தரகா் ரஷீத்திடம் விசாரணை தீவிரம்

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத் தரகா் ரஷீத்திடம், சிபிசிஐடி போலீஸாா் 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

மதுரை: நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத் தரகா் ரஷீத்திடம், சிபிசிஐடி போலீஸாா் 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டனா்.

நீட் தோ்வு ஆள்மாறாட்டம் முறைகேடு தொடா்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் முதலாண்டு மாணவா்கள், அவா்களது பெற்றோா் என மொத்தம் 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில், சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த இடைத் தரகரான கேரளத்தைச் சோ்ந்த ரஷீத், தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

இந்நிலையில், ரஷீத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விவசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் மன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து தேனியில் இருந்து மதுரை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு ரஷீத்திடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணையை தொடங்கினா். ஆள்மாறாட்டம் தொடா்பாக எவ்வளவு தொகை கைமாறியது, சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரஷீத், கேரள மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நீட் தோ்வுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வந்ததும், அவருக்கு கீழ் 7 தரகா்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு ஜனவரி 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →