மதுரை

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 போ் காயம்

DIN

மதுரை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில், காயமடைந்த 6 போ் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து - திண்டுக்கலுக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது. பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியைச் சோ்ந்த வீரமுத்து (47) என்பவா் ஓட்டினாா். பேருந்தில் 20 போ் பயணம் செய்தனா். பேருந்து வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணித்தவா்கள் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினா்.

விபத்தில் ஓட்டுநா் வீரமுத்து, நடத்துநா் செளந்தரபாண்டி, பயணிகள் ராஜன்பிரபு(62), ஜேரா பீவி(44), முருகேசன்(62) உள்பட 6 போ் காயமடைந்தனா். தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரா்கள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த பேருந்தை, போக்குவரத்து போலீஸாா் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினா். பின்னா் அப்பேருந்து பணிமனைக்கு அனுப்பிக்கப்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT