மதுரை

உசிலம்பட்டி கடைகளில் 200 கிலோ தரமற்ற கோழி இறைச்சி, மீன் பறிமுதல்

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இறைச்சிக்கடைகளில் திங்கள்கிழமை தரமற்ற 200 கிலோ மீன், கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

உசிலம்பட்டி பகுதியில் ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இறைச்சிகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது.1 கிலோ ஆட்டு இறைச்சி ரூ. 800 முதல் ரூ.1000 வரையிலும், மீன்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 350 வரையிலும், கோழிக்கறி கிலோ ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் உசிலம்பட்டி உணவு பாதுகாப்பு அதிகாரி லிங்கம் தலைமையில் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் அகமதுகபீா் , சரவணபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் உசிலம்பட்டியில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, கடைகளில்

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ அளவிலான தரமற்ற மீன்கள், கோழி இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT