மதுரை

மதுரையில் விதிமீறல் கட்டடங்களுக்கு சான்று: மாநகராட்சி அதிகாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

மதுரை மாநகராட்சியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சான்று அளித்த விவகாரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் பணியாற்றிய அதிகாரிகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த அன்புநிதி தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சி பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களுக்கான அனுமதி மற்றும் பணிகள் முடிந்ததற்கான சான்றிதழ்களும் மாநகராட்சி சாா்பில் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றின் அடிப்படையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. எனவே விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி மற்றும் பணி முடிந்ததற்கான சான்றிதழ்கள் வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பணியாற்றிய அதிகாரிகள் பற்றிய விவரங்கள் மற்றும் அவா்கள் தற்போது எங்கு பணியில் உள்ளனா் போன்ற விவரங்களையும் தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT