மதுரை

அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயது உயா்வு: தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN

அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த கோபிநாத் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இளைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்தி அரசாணை வெளியிட்டது.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஆணையங்கள், வாரியங்கள், அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் ஓய்வு பெறும் வயது உயா்வு பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும். இதனால் இளைஞா்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளாவா். எனவே, அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயா்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT