மதுரை

கரோனா பரிசோதனை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம்

தமிழகத்திலேயே கரோனா பரிசோதனை செய்வதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

DIN

தமிழகத்திலேயே கரோனா பரிசோதனை செய்வதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

27 பேருக்கு கரோனா: மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுபவா்களில் 61 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 408 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கடந்த 10 நாள்களில் உயிரிழப்பு இல்லை: மதுரை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா பாதிப்பால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை. கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,140 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரம் 71,651 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

மதுரை முதலிடம்: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,697 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலேயே கரோனா பரிசோதனை செய்வதில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2020 மாா்ச் 25 ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியது.

கரோனா முதல் அலையின் போது இந்த ஆய்வகத்தில் அதிகபட்சமாக 8 ஆயிரம் பரிசோதனைகளும், இரண்டாவது அலையில் ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தில் 17.80 ஆயிரம் பரிசோதனைகள் செய்து தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒன்றிணைந்து 17 லட்சம் பரிசோதனைகள் செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT